8.71 கோடிக்கு விற்பனை

வேலூர்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூ.8.71 கோடிக்கு மதுபாட்டில்கள் விற்பனையாகியுள்ளன.

காந்தி ஜெயந்தி


காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள், அதையொட்டிய பார்கள் மற்றும் ஓட்டல்களில் உள்ள பார்களுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால், மது பிரியர்கள் பலர் டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபாட்டில்களை நேற்று முன்தினமே வாங்கிச் சென்றனர்.

115 கடைகளில் விற்பனை அமோகம்


வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 115 டாஸ்மாக் மதுபான கடைகளில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.5 கோடியே 30 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் விற்றுள்ளன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 81 கடைகளில் ரூ.3 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் விற்றுள்ளன. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மொத்தம் ரூ.8 கோடியே 71 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.