ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் அமைச்சர் ஆர்.காத்தியிடம்நேற்று வாழ்த்து பெற்றார். 
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மற்றும் துணைத்தலை வர், ஒன்றிய குழு தலைவர் மற்றும் ஒன்றிய குழு துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நேற்று நடத்தது.

இதில், மாவட்டஊராட்சி குழு தலைவுராக ஜெயந்தி திருமூர்த்தி, துணைத்தலைவராக. எஸ்.எம்.நாகராஜூ, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களாக டி.கிருஷ்ண மூர்த்தி, சுந்தரம்மாள், பெருமாள். சி.தனராஜ், மாலதி, கணே சன், பி.செல்வம். அம்பிகா பாபு நா.சக்தி, மங்கையர்கரசி, சுப்பிரமணி ரா.சிவக்குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

அனைவரும் அமைச்சர் ஆர்.காத்தி நேரில் சந்தித்து மாலைகள், சால்வைகள் அணிவித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வ சப்பன் உட்பட பலர் உடன் இருந்தனர். மேலும் வாலாஜா ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அமைச்சர் ஆர். காந்தியிடம் வாழ்த்து பெற்றனர்.