🌹 1908ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி தினமலர் நாளிதழின் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் பிறந்தார்.

🌹 1906ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி இந்தியாவின் புகழ்பெற்ற ஓவியர் ராஜா ரவி வர்மா மறைந்தார்.


நினைவு நாள் :-

காமராஜர்

📖 கல்விக்கண் திறந்த காமராஜரின், பிறந்த தினமான இன்று, கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

📖 தொண்டு, தூய்மை, எளிமை, தியாகம், நாட்டுப்பற்று ஆகிய பண்புநலன்களின் வடிவமாக திகழ்ந்த காமராஜர் 1903ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி, விருதுநகரில் பிறந்தார்.

📖 1936ல் காங்கிரஸ் கட்சியின் செயலாளர், 1940ல் விருதுநகர் நகராட்சித் தலைவர், 1946-52 வரை சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.

📖 இவர் தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர், பெருந்தலைவர், கர்மவீரர் என்றெல்லாம் புகழப்பட்டவர். இவர் 'கருப்பு காந்தி' என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார்.

📖 இவரது ஆட்சியின் போது இலவச மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். இவரை எம்.ஜி.ஆர் என் தலைவர் என்றும், ஈ.வே.ரா.,பச்சைத் தமிழன் என்றும் பாராட்டியுள்ளார்.

📖 பல நூற்றாண்டுகள் வாழாவிட்டாலும் இந்த நூற்றாண்டு மக்கள் மனதிலும் நிலையாக இருக்கும் கர்மவீரர் காமராஜர், தனது 72வது வயதில் 1975ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி மறைந்தார். மறைவுக்குபின் 1976ல், இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.


பிறந்த நாள் :-

மகாத்மா காந்தி 

🌺 காந்தியடிகள் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் என்னுமிடத்தில் 1869ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி பிறந்தார். இவர் சத்தியம், அகிம்சை என்னும் இரண்டு கொள்கைகளை கடைபிடித்தார். காந்தியின் அகிம்சை தத்துவம் இன்றைக்கும் பொருந்தும் என ஐ.நா. சபை அறிவித்தது. அதன் அடிப்படையில் காந்தி பிறந்த தினத்தை சர்வதேச அகிம்சை தினமாக 2007ல் அறிவித்தது.

🌺 இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல 1885ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார். 1930ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு உப்புக்கு வரி விதித்தது. ஆனால், இதனை ஏற்க மறுத்த காந்தியடிகள், 'தன்னுடைய நாட்டில் விளைந்த பொருட்களுக்கு அன்னியர் வரி விதிப்பதா?' எனக் கருதி, சத்தியாகிரக முறையில் இதை எதிர்க்க முடிவு செய்தார்.

🌺 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக 'ஆகஸ்ட் புரட்சி' என அழைக்கப்படும் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தினை காந்தி தொடங்கி வைத்தார். காந்தியின் மன உறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில் காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா சுதந்திரம் அடைந்தது. இவர் 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி புதுதில்லியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.


லால் பகதூர் சாஸ்திரி 

🌸 இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமர், லால் பகதூர் சாஸ்திரி 1904ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள முகல்சராய் என்ற ஊரில் பிறந்தார்.

🌸 ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற காந்தியடிகள் அனைத்து குடிமக்களையும் அழைத்தபோது லால் பகதூருக்கு வயது 16. காந்தியடிகளின் அழைப்பிற்கு இணங்க அவர் தனது படிப்பை நிறுத்திக்கொண்டு நாட்டின் சுதந்திரத்திற்காக போராடினார். இவர் 1966ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி மறைந்தார்.