🌸 1867ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி தையல் இயந்திரத்தை கண்டுபிடித்த எலியாஸ் ஓவே (Elias Howe) மறைந்தார்.

🌸 1932ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி ஈராக் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.முக்கிய தினம் :-

சர்வதேச போராட்ட தினம்

🌸போராடிப் பெற்ற உரிமைகளைப் பாதுகாத்திடவும், அனைவரும் சமூகப் பாதுகாப்பு, சம உரிமைகள் பெற்றிடவும் தொழிலாளர்கள் போராட வேண்டியுள்ளது. இதனை கருத்தில்கொண்டு உலகத் தொழிற்சங்க சம்மேளனம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 3ஆம் தேதியை சர்வதேச போராட்ட தினமாக அனுசரிக்குமாறு உழைப்பாளிகளுக்கு அறிவித்தது. கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.


நினைவு நாள் :-


ம.பொ.சிவஞானம்

👉 விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த தமிழறிஞருமான ம.பொ.சிவஞானம் 1906ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள சால்வன்குப்பம் என்ற இடத்தில் பிறந்தார். 

👉 வள்ளலாரும் பாரதியும், எங்கள் கவி பாரதி, சிலப்பதிகாரமும் தமிழரும், கண்ணகி வழிபாடு உட்பட ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். சிலப்பதிகாரத்தில் இவரது புலமையைப் பாராட்டி தமிழ் அறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை இவருக்கு சிலம்புச் செல்வர் என்ற பட்டத்தை சூட்டினார்.

👉 இவர் செங்கோல் என்ற ஒரு வார இதழை நடத்தி வந்தார். இவர் எழுதிய வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்றியதில் இவர் முக்கியப் பங்காற்றியவர். மேலும், இவர் பத்மஸ்ரீ விருதையும் பெற்றவர்.

👉 உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று முழங்கிய ம.பொ.சி., 89வது வயதில் 1995ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி மறைந்தார்.


பிறந்த நாள் :-


ஜான் கோரி 

🌟 குளிர்பதனத் தொழில்நுட்பத்தின் (ஏர் கண்டிஷன்) தந்தை என்று போற்றப்படும் ஜான் கோரி 1803ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் பிறந்தார்.

🌟 இவர் சமுதாய சேவைகள், வர்த்தகங்களில் நாட்டம் செலுத்தினார். வெப்ப மண்டல நோய்கள் குறித்த ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். மேலும், இவர் சுகாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டார். சமரச மைய நீதிபதியாக 1841-ல் நியமிக்கப்பட்டார்.

🌟 மலேரியா, அறைகளைக் குளிரூட்டும் முறைகள், பனிக்கட்டி உற்பத்தி தொடர்பாக பல கட்டுரைகளை வெளியிட்டு வந்தார். இவரது கட்டுரைகள் பிரபல அறிவியல் இதழ்களில் வெளிவந்தன.

🌟 பல ஆண்டுகால ஆராய்ச்சிக்குப் பிறகு, பனிக்கட்டிகளை உருவாக்கி அறையைக் குளிரூட்டக்கூடிய நீராவியில் இயங்கும் கருவியைக் கண்டறிந்தார்.

🌟 தற்போதைய அனைத்து விதமான ஏர் கண்டிஷன் கருவிகளின் பெரும்பாலான நுட்பங்கள், முதன்முதலாக இவர் கண்டறிந்த குளிரூட்டும் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டவையே. குளிர்பதன இயந்திரம், பனிக்கட்டி தயாரிக்கும் வழிமுறை, ஏர் கண்டிஷன் கருவிகளை முதன்முதலில் உருவாக்கியவர் என்ற பெருமையைப் பெற்றார்.

🌟 கடைசி வரை மனிதநேயத்துடன் விளங்கிய ஜான் கோரி, உடல்நலம் பாதிக்கப்பட்டு 52வது வயதில் (1855) மறைந்தார்.