கலவை கூட்ரோட்டில் சப் - இன்ஸ் பெக்டர் சரவணமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆற்காட்டில் இருந்து வந்தபைக்கை தடுத்து நிறுத்தினர் . பைக் கில் வந்த 2 பேரையும் விசாரித்தனர் . அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்ததால் , சந்தேகம் அடைந்த போலீசார் 2 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். 

அவர்கள் கலவை அடுத்த பென்னகர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் ( 22 ) , புதுத்தெருவை சேர்ந்த அஜித்குமார் ( 25 ) என தெரியவந்தது . அவர்கள் ஓட்டி வந்த பைக் , கலவை அடுத்த வேம்பி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ்பாபு என்பவருக்கு சொந்தமானது என்பதும் , அந்த பைக்கை கடந்த வாரம் திருடியதும் தெரியவந்தது. 

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் , அவர்களிடம் இருந்து 2 பைக்கை பறிமுதல் செய்தனர்.