இந்தியாவின் பல மாநிலங்களிலும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையானது உச்சம் தொட்டு வருகின்றன.
இது தொடர் மழை, இறக்குமதி பாதிப்பு, உற்பத்தி சரிவு, வரத்து குறைவு உள்ளிட்ட பல காரணிகளினால் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
ஏற்கனவே இந்தியாவில் பெட்ரோல் விலையானது கிட்டதட்ட 110 ரூபாயினை நெருங்கியுள்ள நிலையில், டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
தக்காளி விலை அதிகரிப்பு
குறிப்பாக தக்காளி மற்றும் வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையானது மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக நகர்ப்பகுதிகளில் விலையானது அதிகரித்து வருகின்றது. இது அதிகப்படியான எரிபொருள் விலை, கனத்த மழையால் உற்பத்தி பாதிப்பு உள்ளிட்ட பல காரணிகளினால் அதிகரித்துள்ளது.
சமையல் எண்ணெய் விலை
சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலை அளவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலும் சமையல் எண்ணெய் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய அரசு சமையல் எண்ணெய் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கும் விதமாக, மார்ச் 22 வரை இறக்குமதி வரி குறைக்கப்பட்ட பிறகு, சமையல் எண்ணெய் விலை குறைக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
வெங்காயம் விலை
வெங்காயத்தின் விலையை உயர்வை கட்டுக்குள் வைக்க, நடப்பு பருவத்தில் 2 லட்சம் டன்கள் வெங்காயத்தை அரசு இருப்பு வைத்துள்ளது. எப்படி இருப்பினும் இப்போது தற்போது விழாக்கால பருவம் தொடங்கி உள்ள நிலையில், தேவையானது அதிகரித்துள்ளதால் விலையானது சற்று அதிகரித்துள்ளது.
பருவம் காலத்தில் விலை
பருவ காலத்தில் சில முக்கிய உணவுப் பொருட்களை விலையானது அதிகமாக இருக்கலாம். அவற்றில் ஒன்று வெங்காயம் விலை. இது பெரும்பாலும் உணவு பணவீக்கத்தை தூண்டுகின்றன. இது இந்திய குடும்பங்களில் பண வரவு செலவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்திய குடும்பங்களில் இந்த காய்கறிகள் அடிப்படை மூலதன பொருட்கள் ஆக உள்ள நிலையில், இது சாமானிய மக்களின் பாக்கெட்டுகளை பதம் பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பரில் விலை அதிகரிக்கும்
பொதுவாக செப்டம்பர் மாதத்தில் வெங்காயம் விலையானது அதிகரிக்கும். ஏனெனில் இந்த பருவத்தில் பற்றாக்குறையானது அதிகரிக்கும். புதிய அறுவடை வரத்து வர தாமதமாகும் என்பதால், இது விலை அதிகரிப்பு காரணமாக அமையலாம். பொதுவாக குளிர்காலத்தில் புதிய வரத்து இருக்கலாம் என்பதால் அதுவரையில் விலை சற்று அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தக்காளி & வெங்காயம் விலை
இதற்கிடையில் தற்போது டெல்லி, பாட்னா, கொல்கத்தா, மும்பையில் உள்ளிட்ட பல பகுதிகளில், தக்காளியின் விலை 60 - 65 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் வெங்காயத்தின் விலையானது 50 ரூபாயில் இருந்து 55 ரூபாய் வரையில் இருந்து வருகிறது. இது 20 - 25 ரூபாய் வரையில் விலையானது அதிகரித்துள்ளது.
பலத்த பயிர் சேதம்
கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சப்ளையானது பாதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி செய்யப்படும் முக்கிய பகுதிகளில் பலத்த மழையினால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இப்படி பல காரணங்களினால் வரத்து குறைந்துள்ளதால், காய்கறிகளின் விலையானது 10 முதல் 15 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்த கோடையில் பலத்த மழை பெய்தது தான் என சப்ளையர்கள் கூறுகின்றனர்.
முக்கிய உற்பத்தி
மகாராஷ்டிரா கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் வெங்காயத்தை உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலங்கள் ஆகும். மொத்த வெங்காயத்தில் 75% இந்த மாநிலங்களில் இருந்து இந்த கோடை பருவத்தில் கிடைக்கும். ஆனால் தற்போது மேற்கண்ட மாநிலங்களில் மழையால் சேதமடைந்த நிலையில் வரத்து குறைந்துள்ளது.
அதிக செலவு
குறிப்பாக இந்திய சமையலறையில் பயன்படுத்தப்படும் மிகப் பிரதான மூலதனமாக இருக்கும், வெங்காயத்தின் விலை தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது சாமானிய மக்களின் குடும்பத்தில் மீண்டும் அதிக செலவுக்கு வழிவகுக்கும். இது அவர்களின் பாக்கெட்டுகளை பதம் பார்க்கலாம் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.