ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவை, வெப் கேமரா மூலம் நேரடியாக ஆய்வு செய்யும் மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை மேக மூட்டங்களுக்கு இடையே வாலாஜா, ஆர்காடு, திமிரி ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் வெப் கேமரா மூலம் நேரடியாக மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.