வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள், குளங்கள் நிரம்பியுள்ளது. பல ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வெளியேறி வருகிறது. ஏரிகளில் தண்ணீர் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை விட்டுவிட்டு மழை பெய்தது. இதில். நேற்று முன்தினம் மாலை கலவையில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால், பல்வேறு இடங்களில் வெள்ளம் ஓடியது. தாழ்வான இடங்களில் இருந்த கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தொடர்ந்து இரவு நேரத்திலும் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக வாலாஜாவில் 54 மி.மீட்டர் மழை பதிவானது.

மாவட்டத்தில் பெய்தமழை அளவு விபரம்(மி.மீட்ட ரில்): 

கலவை 53.4, 
அரக்கோணம் 13.4. 
ஆற்காடு 16.4, 
நெமிலி 9, 
வாலாஜா 54. 
அம்மூர் 26, 
சோளிங்கர் 22.