காந்தி ஜயந்தியையொட்டி, சனிக்கிழமை (அக். 2) மதுக்கடைகள் திறக்க அனுமதியில்லை என வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து அவா்கள் வெளியிட்டுள்ள தனித்தனி செய்திக்குறிப்புகளில் மேலும் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் ( டாஸ்மாக் ) கட்டுப்பாட்டில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கிவரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக் கூடங்கள், நட்சத்திர அந்தஸ்து ஹோட்டலில் உள்ள மதுக்கூடங்கள் ஆகிய அனைத்தும் அக். 2-இல் (சனிக்கிழமை ) மூடி வைக்க வேண்டும். மேற்படி தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்யக் கூடாது.

மீறி விற்பனை செய்தால், மதுக்கூடத்தின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், உரிமங்களை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனா்.