ஆற்காடு அடுத்த சாத்தூர் ஊராட்சி களர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பிச்சாண்டி ( 56 ) , தொழிலாளி . இவருக்கு திருமணமாகி மனைவி , 3 மகன்கள் உள்ளனர் .

பிச்சாண்டி சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார் . இதனால் அவரது மனைவி சென்னையில் தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார் . இதனால் மனவேதனையில் இருந்த பிச்சாண்டி நேற்று இரவு வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கினார் . 

இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் , அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பிச்சாண்டி இறந்தார். 

இதுகுறித்து ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .