கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாத தொழிலாளர்களின் விவரங்களை வழங்க வேண்டும். என்று தொழில் நிறுவனங்களுக்கு கலெக் டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். 
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, அனைத்து தொழில் நிறுவனங்களில் பணிபுரியும், தொழிலாளர்கள். அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில், கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கி பேசியதாவது: ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள் என 1,350க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்கள், அலுவலர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். மாவட்டத்தில் 85 ஆயிரம் நபர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர். அவர்கள் அனைவரும் 6ம் கட்டமெகா கொரோனா தடுப்பூசி முகாமிற்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள், அலுவலர்கள் முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துக் கொண்ட விவரங்களை உடனடியாக சேகரித்து வழங்க வேண்டும். கோவின் ஆப் அல்லது கூகுள் ஆப் மூலம் தொழிற்சாலையில் பணி புரியும் நபர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட விவரங்களை சேகரித்து வழங்க வேண்டும். தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துக் கொண்டதை உறுதி செய்ய வேண்டும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தடுப்பூசி போடாத விவரங்கள் சேகரிப்பட்டு அந்தந்த தொழிற்சாலைக்ளில் வாரம் முழுவதும் தடுப்பூசி முகாம் நடத் தப்படும். இதனை தொழி லக பாதுகாப்பு இணை இயக்குனர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் ஆகி யோரிடம் தெரிவித்தால் முகாம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்ப டும்.

இவ்வாறு அவர் கூறி னார்.

இதில், தொழிலாக பாதுகாப்பு இணை இயக் குனர் முகமது கனி, மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் ரவிச் சந்திரன், சுகாதார பணி கள் துணை இயக்குனர் டாக்டர் மணிமாறன், மாவட்ட தொழில் மைய மேலாளர் ஆனந்தன் மற் றும் அனைத்து தொழில் நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.