மழையால் விளைச்சல் பாதிப்பு எதிரொலி யாகபல்லாரி, குடமிள காய் விலை திடீரென உயர்ந்துள்ளது. அதே வேகத்தில் வாங்க ஆட்கள் இல்லாததால் தக்காளி விலை சற்று குறைந்துள்ளது.
ஆயுத பூஜையை யொட்டி பழங்கள். காய்கறி விலை கடுமையாக அதிகரித்தது. தக்காளி விலை எப்போதும் இல்லாத வகையில் மொத்த விலையில் கிலோ 40 வரை விற்பனையானது.
இது சில்லறை விலையில் கிலோ 60 வரை உயர்ந்தது. இதே போல பழங்கள் விலை கிலோ 20 முதல் 25 வரை அதிகரித்து காணப்பட்டது.
இந்த நிலையில் ஜெட் வேகத்தில் அதிகரித்த தக்காளி விலை தற்போது குறைய தொடங்கியுள்ளது. அதாவது, தொடர்ச்சியாக ஆயுதப்பூஜை, விஜயதசமி என்று 4 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை வந்தது. இதனால், பெரும்பாலானவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். காய்கறி வாங்க ஆட்கள் இல்லத தால் தக்காளி விலை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் தற்போது கிலோ தக்காளி 40லிருந்து 30 ஆக விலை குறைந் துள்ளது. அதே போல பல்லாரி, குடமிளகாய் விலையும் தற்போது உயர தொடங்கியுள்ளது.
குறித்து சென்னை கோயம் பேடு காய்கறி மார்க் கெட்மொத்த வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்தரராஜன் கூறிய தாவது:
சென்னை கோயம் பேடு மார்க்கெட்டுக்கு பல்லாரி ஆந்திரா, மகராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து தினசரி 60 லாரிகள் வரை வந்தது. அங்கு பெய்த மழையால் பல்லாரி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரத்து குறைந்துள்ளது. தற்போது 40 லாரிகள் வரை தான் பல்லாரி வெங்காயம் வருகிறது. இதனால், பல்லாரி விலை அதிகரித்துள்ளது.
பல்லாரி(ஆந்திரா) கிலோ 10லிருந்து 15, பல்லாரி(மகராஷ்டிரா) 20லிருந்து 30 ஆக விலை அதிகரித்துள் ளது. அதே போல கர்நாடகா, ஊட்டி போன்ற பகுதியில் இருந்து குடமிளகாய் வருகிறது. அங்கு மழையால் பாதிக்கப்பட்டு குட மிளகாய் 20லிருந்து 40, 50 என்று விலை அதிகரித்துள்ளது.
அதே போல பீன்ஸ் 80லிருந்து 50, 60க்கும், கேரட் 60லிருந்து 40, சேனைக்கிழங்கு 20லிருந்து 15, அவரைக்காய் 80லிருந்து 40, சேனைக்கிழங்கு 20லிருந்து 15, சேப்பங்கிழங்கு 30லிருந்து 25, இஞ்சி 60லிருந்து 50 என்று விலை குறைந் துள்ளது. அதே போல பீட்ருட் 20, பச்சைமிள காய் 20, கத்தரிக்காய் 25, வெண்டைக்காய் 15, புடலைங்காய் 15, நூக்கல் 20, முள்ளங்கி 15 என்று விற்கப்படுகி றது. இவ்வாறு அவர் கூறினார்.
மொத்த மார்க் கெட்டில் தான் இந்த விலை. சில்லறை மார்க் கெட்டில் கிலோவுக்கு குறைந்தப்பட்சம் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகமாகவிற்கப்பட்டு வருகிறது.