ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே உள்ள பள்ள குன்னத்தூர் கிராமம் சாவடி தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி இவரது மனைவி சுமதி இவர்களுக்கு அகிலா-17 என்ற ஒரு மகள் உள்ளனர்

இந்த நிலையில் நேற்று முன்தினம் அகிலா கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார் ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அக்கம் பக்கம் முழுவதும் தேடி உள்ளனர்

இதுகுறித்து அகிலாவின் பெற்றோர்கள் பாணாவரம் காவல் நிலையத்துக்கு சென்று புகார் மனுவை கொடுத்தனர் அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்

பிறகு அதே பகுதியை சேர்ந்த ஏழுமலையின் மகன் தினேஷ் என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக போலீசாரிடம் அகிலாவின் பெற்றோர்கள் கூறினார்