அரக்கோணம் ஜெய்பீம் நகரைச் சேர்ந்த வர்லட்சுமணன்(47). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மகன் ராஜ கணபதி(23) என்பவருக்கும் இடையே முன்விரோத தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் லட்சுமணனின் மூக்கு மற்றும் கையில் கத்தியால் ராஜகணபதி வெட்டினார்.

இதில் காயமடைந்த லட்சுமணனை அங்கிருந்தவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து அரக்கோ ணம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜகணபதியை கைது செய்தனர்.