12 houses damaged by continuous rains
தொடர் மழையால் மண் சுவரால் கட்டப்பட்ட குடிசை மற்றும் ஓடு, சிமென்ட் ஷீட் வீடுகளின் சுவர்கள் பகுதியாக இடிந்து சேதமடைகிறது. கடந்த 8ந் தேதி அரக்கோணம், நெமிலி தாலுகாவில் 17 வீடுகள் இடிந்து சேதமடைந்தது.
நேற்று முன்தினம் அரக்கோணம் தாலுகாவில் செம்பேடு விஸ்வநாதபுரம் கோபி, இச்சிப்புத்துார் ஈசலாபுரம் பிரபா, குருவராஜப்பேட்டை அங்காளம்மன் கோயில் தெரு நடராஜன், ஜோதிபுரம் பேங்க் தெரு பிரகாஷ், அணைக்கட்டாபுத்துார் கன்னிகா, கிழவனம் நீலவேணி, அம்மனுார் அண்ணா தெரு சற்குணம் ஆகியோரின் ஓடு மற்றும் குடிசை வீடுகளின் சுவர்கள் பகுதியாக இடிந்து சேதமடைந்தது.
நெமிலி தாலுகா
நெமிலி தாலுகாவுக்கு உட்பட்ட ஜாகீர்தண்டலம் நடராஜன், மேலபுலம் நடுத்தெரு மோகன் ராஜ், கீழாந்துரை சின்னத்தெரு சின்ன பொண்ணு, களத்தூார் கடைசிதெரு ரோசி, அசநெல்லிக்குப்பம் பூவை மூர்த்தி தெரு மஞ்சுளா, புதுப்பட்டு கங் காதரநல்லுார் பஜனை கோயில் தெரு சத்தியமூர்த்தி ஆகியோரின் குடிசை மற்றும் ஓடு வீடுகள் இடிந்து சேதமடைந்தது.
பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர்களுக்கு தாசில்தார்கள் பழனிராஜன் (அரக்கோணம்), ரவி (நெமிலி) ஆகியோர் அரசின் நிவாரண உதவித் தொகை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.