125-vehicles-seized-in-criminal-cases-in-ranipettai-district-are-up-for-auction

எஸ்பி தகவல்


ராணிப்பேட்டை மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 125 வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளது. 

இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி தீபா சத்யன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:


ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகளின் கீழ் கைப்பற்றப்பட்ட 125 வாகனங்கள் அதன் விவரம் மற்றும் உரிமை கோரப்படாத நிலையில், பொது ஏலம் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 125 வாகனங்களை இதுவரை யாரும் உரிமை கோராததால் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மூலமாக அரசுடமையாக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்களுக்கான பொது ஏலம் இம்மாதம் 30ம் தேதி காலை 11 மணியளவில் ராணிப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. 24 முதல் 26ம் தேதி வரை வாகனங்களை பார்வையிடலாம். ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 25 ஆயிரம் முன் வைப்பு தொகை செலுத்தி தங்களுடைய பெயர் விலாசத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

30ம் தேதி காலை 11 மணியளவில் பொது ஏலம் நடைபெறும். ஏலம் எடுப்பவர்கள் தங்களது குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆதார் அட்டை என இவற்றில் ஏதேனும் ஒன்று உடன் எடுத்து வந்து காண்பித்து தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏலம் எடுப்பவர்கள் வாகனத் தொகையுடன் ஜிஎஸ்டி தொகையையும் சேர்த்து உடனடியாக செலுத்தி வாகன சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.