கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் தகவல்

15th is the last day for farmers to insure their crops in the integrated Vellore district


ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் விவசாயிகள் பயீர்க்காப்பீடு செய்ய நாளை மறு நாள் இறுதி என்று மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

வேலூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் சா.திருகுணஐய்யப்பதுரை தெரிவித்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில்,(வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ) கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் ரபி 2021-2022 பருவத்திற்கு, திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர்க்காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிக்காப்பீடு செய்ய விரும்பும் அனைத்து விவசாயிகளையும் (பயிர் கடன் பெறாதோர்) பயிர்க்காப்பீடு செய்வதற்கான இறுதி நாளான 15.11.2021க்குள் சேர்ந்து பயனுற வேண்டும்.

மேலும், அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் கடன் சங்கங்கள், நகர கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் அவற்றால் நடத்தப்பெறும் பொது சேவை மையங்கள் ஆகியவை வங்கி விடுமுறை நாட்களான 13.11.2021 மற்றும் 14.11.2021 (2வது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு நாட்களும் செயல்படும் என்பதையும், சங்கங்களில் பயிர்க்காப்பீடு பிரீமியத்தொகை பெற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

எனவே அனைத்து விவசாயிகளும், திருத்தியமைக் கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர்க்காப்பீடு திட்டத்தின் கீழ் 15.11.2021க்குள் மேற்படி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பிரீமியத்தொகை செலுத்தி பயிர்க்காப்பீடு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.