சோளிங்கர் அருகே 4 கடைகளில் பணத்தை திருடி சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
சோளிங்கரில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில் வாணாபுரம் கூட்டுரோடு பகுதியில் உள்ள 4 கடைகளில் ஷட்டரை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் 50 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றனர். கடை உரிமையாளர்கள் கொடுத்த புகாரின்பேரில், சோளிங்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று எஸ்ஐக்கள் ஏழுமலை, விஜயகுமார் மற்றும் போலீசார் திருத்தணி சாலையில் உள்ள பில்லாஞ்சி சோதனை சாவடியில் நேற்று முன் தினம் இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வேகமாக வந்த இரண்டு வாலிபர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் ஆந்திர மாநிலம். சித்தூரை சேர்ந்த அன்சர்அலி(26), ஆதில் (22) என்பதும், இவர்கள் பாணாவரம் கூட்ரோடு பகுதியில் நான்கு கடைகளில் ஷட்டரை வளைத்து கடையின் உள்ளே சென்று பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து கத்தி, இரும்பு ராடு கட்டிங் பிளேடு உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். உ மேலும் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.