நிஜ வால் பையன்... வெளிநாடு ஒன்றில் 12 சென்றிமீற்றர் நீள வாலுடன் பிறந்த குழந்தை அதிகம் குறும்பு செய்யும் குழந்தைகளை ’சரியான வாலு’ என்பார்கள்.
Baby born in Brazil with a 12 cm long tail
குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்று கூறும் பரிணாம வளர்ச்சிக் கொள்கையின்படி, மனிதனின் மூதாதையர்களுக்கு வால் இருந்ததாகவும், 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நிமிர்ந்து நடக்கத் துவங்கிய மனிதன் வாலை இழந்ததாகவும் அறிவியல் கூறுகிறது.
பொதுவாக குழந்தை தாயின் வயிற்றிலிருக்கும்போது, ஆரம்ப நாட்களில், அதாவது 4 முதல் 8 வாரங்களில் அதற்கு ஒரு சிறு வால் போன்ற அமைப்பு உருவாகும். குழந்தை வளர வளர, அந்த வால் மறைந்துவிடும்.
ஆனால், அபூர்வமாக சிலருக்கு அந்த வால் மறையாமல் வளருவதும் உண்டு.
இந்த குழந்தையைப் பொருத்தவரையில், 12 சென்றிமீற்றருக்கு வால் ஒன்று வளர்ந்துள்ளதுடன், அதன் நுனியில் ஒரு உருண்டையான அமைப்பும் காணப்பட்டுள்ளது.
பின்னர் அந்த வால் மருத்துவர்களால் அகற்றப்பட்டுள்ளது. இப்போது குழந்தை சாதாரணமாக உள்ளது.
இதேபோல், இந்தியாவில் அர்ஷித் அலி கான் என்ற ஒரு குழந்தை வாலுடன் பிறந்தது. 14 வயதாகும் வரை அந்த சிறுவன் வாலுடனேயே இருந்தான்.
அவனை அனுமானின் மறு பிறவி என்று கூறி, அவனை மக்கள் வணங்கி வந்தார்கள். பின்னர் அவனுக்கு அது விருப்பம் இல்லாததாலும், தொந்தரவாக இருந்ததாலும், மருத்துவர்கள் அந்த வாலை அகற்றிவிட்டார்கள்.