Aadhar card for 27 members of Irular family, action on the order of the Minister

பரு வமழையால் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட ராணிப்பேட்டை அடுத்த தெங்கால் ஊராட்சிக்கு உட்பட்ட இருளர் குடும்பத்தினர் தெங்கால் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 27 பேர் ஆதார் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அட்டையின்றியும். ஆதார் அட்டை குறித்த விழிப்புணர்வு இன்றி பல இடங்களில் சுற்றி திரிந்தனர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் இவர்களை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சந்தித்து. மழைக்கால நிவாரணம் வழங்கினார். அப்போது அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தினார். ஆனால் அவர்கள்,ஆதார் அட்டை இல்லை என கூறினர். இதையடுத்து அவர்களுக்கு ஆதார் அட்டை புகைப்படம் எடுத்து உடனே வழங்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

இதையடுத்து கடந்த 13ம்தேதி ராணிப்பேட்டை ஆர்டிஓ பூங்கொடி தலைமையில் வாலாஜா தாசில்தார் ஆனந்தன் மற்றும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து நிவாரண முகாமுக்கு சென்று 4 குடும்பத்தை சேர்ந்த மொத்தம் 27 பேருக்கு ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுத்தனர்.

ஆதார் எடுக்க உத்தரவிட்டு நடவடிக்கை எடுத்த அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு. தெங்கால் ஊராட்சி தலைவர் இந்திராணி பத்மநாபன் மற்றும் பொதுமக்கள். இருளர் குடும்பத்தினர் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.