ராணிப்பேட்டை பெல் நிறுவனம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர் சங்கத்தினர்.
போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராணிப்பேட்டை பெல் நுழைவு வாயிலில் ஊழியர்கள் நேற்று உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை பெல் நுழைவு வாயில் பகுதியில் ஸ்டாப் யூனியன், எம்ப்ளாஸ் யூனியன், இஜிடியூ, ஐஎன்டியூசி ஆகிய சங்கங்கள் சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. தொழிலாளர்களுக்கு போனஸ் தொகையை விரைந்து வழங்கவேண்டும், பெல் நிறுவன நிதிநிலைமை மற்றும் வளர்ச்சி குறித்து தொழிற்சங்க தலைவர்களுடன் விவாதிக்க ஜேசிஎம்ஐ கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது.

இதில் சங்க பொதுச்செயலாளர்கள் பாலாஜி, ராமச்சந்திரன். மோகன்குமார் உட்பட 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.