ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, ராணிப்பேட்டை ஆகிய 2இடங்களில் உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன. ஆற்காடு, கலவை, ராணிப்பேட்டை வாலாஜா, சோளிங்கர், நெமிலி, காவேரிப்பாக்கம், பனப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகள், பழங் கள், கீரை வகைகள் ஆகியவற்றை உழவர் சந்தைகளில் விற்கின்றனர். இங்கு விற்கப்படும் காய் கறிகள் பசுமையாகவும் நியாயமான விலையில் கிடைப்பதால் ஏராளமானோர் உழவர் சந்தைகளுக்கு சென்று காய்கறி களை வாங்குகின்றனர்.

விவசாயிகளை ஊக்கப்படுத்தி உழவர் சந்தைகளுக்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டுவர விழிப்புணர்வு முகாம்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாலாஜா தாலுகா அனந்தலையில் விவசாயிகளுக்கான விழிப் புணர்வு முகாம் நேற்று முன்தினம் நடந்தது.

மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகம் துணை இயக்குனர் சீனிராஜ் தலைமை தாங்கி பேசுகையில், 'விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகள். பழங்கள். கீரை வகைகளை உழவர் சந்தைகளில் விற்க கொண்டு வர வேண்டும். பஸ்களில் இலவசமாக காய்கறிகளை கொண்டு வரலாம். விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். நுகர்வோருக்கு தரமான காய்கறிகள் கிடைக்கும். விவசாயிகள் தங்களது விளை பொருட்களை உழவர் சந்தைகளுக்கு கொண்டு வந்து விற்று பயன்பெற வேண்டும்.

விதைகள், உயிர் உரங்கள், சாகுபடி செலவீனம். சொட்டுநீர் பாச தினம் உழவர் சந்தையில் பங்குபெறும் முறை. தொழில்நுட்ப வளர்ச்சி, மானிய திட்டங்கள் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது' என்றார். இதில். மாவட்ட உழவர் சந்தை நிர்வாக அலுவலர் முருகன், உதவி நிர்வாக அலுவலர்கள் மோகன் குமார்,கோபிநாத், உதவி வேளாண்மை அலுவலர் கள்நாகராஜ்(வாலாஜா). நந்தினி (சோளிங்கர்) மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.