ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 136.24 கோடி மதிப்பில் 71,044 பேருக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் முதலமைச்சர் மருத்துவ காப்பீடு மற்றும் பிரதமர் மருத்துவ காப்பீடு திட்டங்கள் இணைக்கப்பட்டு 3 ஆண்டுகள் நிகழ்வை யொட்டி 9 மாற்றுத்திறனாளிகளுக்கு 18 லட்சம் மதிப்பிலான செயற்கைகை, கால்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. 

இதில், கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை, கால்களை வழங்கிபேசிய தாவது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் கீழ் 4 அரசு மருத்துவமனைகள், 3 தனியார் மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலமாக 71,044 நபர்களுக்கு 136.24 கோடி மதிப்பில் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மருத்துவ காப்பீடு திட்டத்தின் அடையாள அட்டை எடுக்காத பயனாளிகள் ஆண்டு வருமானம் 72 ஆயிரம் கீழ் உள்ளவர்கள் காப்பீட்டு விண்ணப்ப படிவத்தில் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் கையொப்பம் பெற்று. கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு தொடர்பாக பதிவு செய்யும் அறையில் புகைப்படம் எடுத்து பயனடையலாம்.

மேலும், இத்திட்டத்தின் கீழ்பயனடைய ஏதேனும் சந்தேகம் இருந்தால் 1800 425 3993 என்ற கட்டணமில்லா தொடர்பு எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இதில், டிஆர்ஓ ஜெயசந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மருத்துவ பணிகள் டாக்டர் கண்ணகி, முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு ஒருங்கிணைப்பாளர்கள் ஞானம். சையத் அலி ஆகியோர் கலந்துகொண்டனர்.