இதுதொடர்பாக கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 30ம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேரம் மாற்றப்பட்டு மாலை 3 மணியளவில் நடைபெறும். 

இந்த கூட்டத்தில் வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, உட்பட அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர். 

எனவே, விவசாயிகள் கலந்துகொண்டு பொது பிரச்னைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.