Collector inspection at Walaja Anaicut dam
வாலாஜா பாலாறு அணைக்கட்டில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். உடன் தாசில்தார் ஆனந்தன்.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதன் காரணமாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் துரிதப்படுத்தி உள்ளார். இதற்கிடையில், தொடர் மழை காரணமாக வாலாஜா பாலாற்றில் கடந்த சில நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது 8,933 கனஅடி நீர் கடலுக்கு திருப்பிவிடப்பட்டு வருகிறது. மேலும், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க தண்டோரா மூலம் எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வாலாஜா பாலாறு அணைக்கட்டில் ஆய்வு செய்தார், அப்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். அணைக்கட்டில் இருந்து உபரிநீர் வெளியேற்றுவது ஆகியன குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
மேலும், 24 மணிநேரமும் அணைக்கட்டு பகுதியை கண்காணிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.