ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தீபாவளி திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாள். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரிய வர்கள் வரை பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். பட்டாசுகளை வெடிப்பதால் நம்மைச்சுற்றிலும் உள்ள நிலம், நீர், காற்று ஆகியவை மாசுபடுகிறது. பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் அதிகபடியான ஒலி மற்றும் காற்று மாசினால், குழந்தைகள், முதியவர்கள், உடல் நிலை பாதிக்கப்பட்டோர் மன தளவில் பெரும் பாதிப்பிற்கு ஆளாகின்றனர்.

பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2018ம் ஆண்டு அக் டோபர் 23ம் தேதியிட்ட ஆணையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகள் உற்பத்தி செய்ய வேண்டும். வருங்காலங்களில் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும். பட்டாசுகள் வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப் படுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழக அரசு கடந்த 3 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகள் வெடிக்க நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. அதன்படி. இந்தாண்டும் காலை 6முதல் 7 மணி வரையிலும், இரவு 7மணிமுதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்கலாம். சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்புமாகும். 

இதனை கருத்தில் கொண்டு கீழ் கண்டவற்றை கடைபிடிக்க வேண்டும். குறைந்த அளவு ஒலி மற்றும் காற்று மாசு தன்மை கொண்ட பட்டாசுகளை மட்டும் வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம். உள்ளாட்சி அமைப்புகளிடம் முன் அனுமதி பெற்று பொதுமக்கள் ஒன்றுகூடி பசுமை பட்டாசுகளை வெடிக்க அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் முயற்சி மேற்கொள்ளலாம். அதிகெஒலி எழுப்பும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றகூடிய இடங்களுக்கு அருகே பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். விபத்து மற்றும் மாசற்ற மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத பட்டாசுகளை அரசு அறிவித்த நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாகவடித்து மாசற்ற தீபாவளியை பொதுமக்கள் கொண்டாட வேண்டும். அனைவருக்கும் மாசற்ற தீபாவளி நல்வாழ்த்துக்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.