ஆற்காடு அடுத்த அருங்குன்றத்தில் ரூ.62 லட்சம் செலவில் சமுதாயக் கூடம் கட்டுவ தற்காக பூமி பூஜை நடந்தது. 
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தார். பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் திரிபுரசுந்தரி, இணைப் பொருளாளர் ஜெயச்சந்திரன், ஆற்காடு பஞ்சாயத்து யூனியன் சேர்மன் புவனேஸ்வரி சத்தியநாதன், துணைச் சேர்மன் ஸ்ரீமதி நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒப்பந்ததாரர் கே.வேளூர் நந்தகுமார் வரவேற்றார். அமைச்சர் காந்தி கலந்துகொண்டு சமுதாயக்கூடத்திற்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.

ஆற்காடு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் நந்தகுமார், அருங்குன்றம் ஊராட்சிமன்ற தலைவர் தயாளன், ஒன்றிய கவுன்சிலர் சுசிலா வேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்..