Decided to inspect 11 bank accounts of a female public servant
அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நேரு நகரில் உள்ள அவரின் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது கணக்கில் வராத ரூ.2 கோடிக்கும் அதிகமான ரொக்கப்பணம், மற்றும் நகை உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவரிடம் பறிமுதல் செய்யப் பட்ட 11 வங்கி கணக்கு களை போலீசார் ஆய்வு செய்ய உள்ளனர். இது தொடர்பாக வங்கி மேலாளர்களுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் கடிதம் அனுப்பி உள்ளனர்.
மேலும் ஷோபனா பயன்படுத்திய வங்கி லாக் கரை திறந்து பார்க்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இவை தவிர அவர், உறவினர்கள் பெயரில் சொத்துகள் வாங்கி குவித்து உள்ளாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.