Police set up barricades and blocked traffic on the Tiruvalam to pututhaku bridge in the after math of the floods in the lake


பாலாற்றில் வெள்ளப் பெருக்கு எதிரொலியாக பூட்டுத்தாக்கு- திருவலம் தரைப்பாலத்தில் போலீசார் தடுப்பு வேலி அமைத்து போக்குவரத்தை தடை செய்தனர்.

பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் எதிரொலியாக நேற்று பூட்டுதாக்கு-திருவ லம் பாலாற்று தரைப்பாலம் தடுப்பு வேலி போட்டு மூடப்பட்டு போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. மேலும் ஆந்திர மாநிலம் கலவ குண்டா அணையிலில் இருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ராணிப்பேட்டை மாவட்ட பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பாலாற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தி இந்நிலையில், 
ரத்தினகிரி அருகே உள்ள பூட்டுத்தாக்கில் இருந்து திருவலம் செல்ல பாலாற்றில் தரைப்பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் வழியாக பூட்டுத்தாக்கு, அரப்பாக்கம், கீழ்மின்னல் உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் அம்முண்டி, குப்பத்தாமோட்டூர், திருவலம். சேர்க்காடு, திருவள்ளுவர் பல்கலைக்கழகம், வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை, பெல், சிப்காட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்களில் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்த தரைபாலத்தை மூழ்கியடித்தபடி பாலாற்றில் வெள்ளம் செல்கிறது. மேலும் அங்குள்ள செக்போஸ்ட் வரை பாலாற்றில் தண்ணீர் வந்துள்ளதால் பாதுகாப்பு கருதி போலீசார் அந்த பகுதியில் தடுப்பு வேலி அமைத்து போக்குவரத்தை தடை செய்துள்ளனர்.

அதேபோல் பாலத்தின் எதிர்புறத்திலும் திருவலம் போலீசார் தடுப்பு வேலி அமைத்து உள்ளனர். இதனால் தரைப்பாலத்தில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு இரண்டு புறமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அந்த தரைபாலம் வழியாக சென்று வந்த பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மேல்விஷாரம், தெங்கால் மேம்பாலம் மற்றும் ஆற்காடு சென்று பாலாற்று மேம்பாலம் வழியாக சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.