ஆற்காடு, வேலுார் மெயின் ரோடு. முதல்தெருவை சேர்ந்தவர் சிவசங்கரன் (67). இவர் ஆற்காடு அண்ணாசிலை அருகே எண்ணை கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு டூவீலரில் வேலுார் மெயின் ரோடு வழியாக ஆற்காடு பஸ் ஸ்டாண்டு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அடையாளம் தெரியாத வாகனம் சிவ சங்கரன் ஒட்டி வந்த டூவீலர் பின்னால். மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. 

இதனால் நிலை தடுமாறி சிவசங்கரன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் சிவசங்கரனை மீட்டு ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் சிவசங்கரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி தகவலறிந்த ஆற்காடு டவுன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.