பொன்னை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மேல்பாடி தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி செல்லும் தண்ணீர்.

Floodwaters from the Ponnai River submerge the overpass


தமிழகம் மற்றும் ஆந்திராவில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சித்தூர் கலவகுண்டா அணை திறக்கப்பட்டதாலும் தமிழகத்தில் அதிகளவு மழை பெய்துள்ளதாலும் பொன்னை ஆற்றில் கடந்த ஒரு வாரமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த தண்ணீர் தெங்கால் அருகே பாலாற்றில் கலக்கிறது. 


தற்போது ராணிப்பேட்டை பாலாற்றில் அதிகளவு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் பெரும் பாலான ஏரிகள் நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது. இந்நிலையில் மழையால் உயிரிழப்பை தடுக்க பொன்னை ஆறு. தெங்கால், ராணிப்பேட்டை பாலாற்றின் கரையோரங்களில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

எஸ்பி தீபாசத்யன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையில் போலீசார். ஆற்றங்கரையோரங்களில் எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். அதில், ஆற்றில் இறங்கவோ. துணி துவைக்கவோ, வேடிக்கை பார்க்கவோ செல்லக்கூடாது, கால் நடைகளையும் அங்கு ஓட்டிச்செல்லக்கூடாது என எச்சரிக்கை செய்து அப்பகுதிகளை கண்காணித்து வருகின்றனர்.