ரத்தினகிரி பாலமுருகன் மலைக்கோயிலில் உள்ள முருகப் பெருமானுக்கு 115 கிராமில் தங்கத்தினால் செய்யப்பட்ட பாதம் மற்றும் 10 கிலோவில் வெள்ளியினால் செய்யப்பட்ட பூண் போட்ட பிரபை ஆகியவற்றை பெங்களூரை சேர்ந்த பக்தர் ஒருவர் கோயில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை சாமிகளிடம் காணிக்கையாக வழங்கினார்.

இதனை முன்னிட்டு வள்ளி தேவசேனா உடனுறை சுப்பிரமணிய சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்கப்பாதம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது. 

இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு தரிசித்தனர்.