2021 ஆம் வருடம் நவம்பர் 13ஆம் தேதி (ஐப்பசி -27 ) அன்று மாலை 6- 22 மணிக்கு

மகர ராசியில் இருக்கும் அவிட்ட நட்சத்திரம் 2 ஆம் பாதத்தில் இருந்து கும்பம் அவிட்டம் நட்சத்திரம் 3ஆம் பாதத்திற்கு குரு பெயர்ச்சி ஆகிறார்.

ஒரு ராசியில் இருந்து குருபகவான் மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாகும் நிகழ்வை குரு பெயர்ச்சி என்பரவம்.

குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள் குரு பகவானின் பார்வை இருந்தால் வாழ்க்கையில் சகல நன்மைகளும் சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

நம்முடைய வாழ்க்கை , ஜாதகத்தை வைத்துதான் நிர்ணயம் செய்யப்படுகின்றது .

அதற்காக முழுமையாக மூழ்கி விடக்கூடாது.

ஓரளவு நம்பிக்கையோடு இன்றைய வருடம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள் .

அதன்படி சிறிது கவனமாக இருங்கள்.

தெய்வத்தின் மீது நம்பிக்கை வையுங்கள் .இறைவனை வேண்டுங்கள். தன்னம்பிக்கையோடு எந்த செயலிலும் இறங்குங்கள்.

இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இருந்தால் தைரியமாக எந்த காரியத்தையும் செய்யுங்கள்.

சாதகமாக இல்லை என்றால் செய்யும் தொழிலில் குடும்பத்தில் சற்று கவனமாக இருங்கள் .

ராசியில் 2, 5, 7, 9, 11 இந்த பார்வையில் குரு பார்த்தால் நல்ல பலனளிக்கும். அதிர்ஷ்டமான பலன் அனைத்தும் கிடைக்கும்.

அதன்படி அதிர்ஷ்டம் கிடைக்க கூடிய ராசிகள்- மேஷம் ,மிதுனம் ,சிம்மம், துலாம், தனுசு ,கும்பம்.

மற்ற ராசிக்காரர்கள் சிறிது கவனத்துடன் இருக்க வேண்டும் ஜாதகம் பார்ப்பவர்களின் கருத்து.

முக்கியமாக சில விஷயங்கள் நாம் தவறாது செய்து வந்தால் நிச்சயம் எந்த பாதிப்பும் நம்மிடம் அணுகாது பார்த்து கொள்ளலாம்.

  • குலதெய்வத்தை வெள்ளிக்கிழமை அன்று தவறாது வேண்டிக்கொள்ளுங்கள்.

  • யாருக்கும் மனதறிந்து துரோகம் செய்யாதீர்கள்.
  • தானதர்மங்கள் தம்மால் முடிந்த அளவுக்கு செய்வதற்கு முயற்சி செய்யுங்கள் ‌.
  • பெற்றோர்களை கண்ணும் கருத்துமாய் பார்த்துக்கொள்ளுங்கள்.
  • இவ்வாறு நம்முடைய செயல்பாடுகள் இருந்தால் நிச்சயம் இந்த குரு பெயர்ச்சி நமக்கு வாழ்க்கையில் நல்ல பலனை கொடுக்கும் என்பது திண்ணம்.

விதியை மதியால் வெல்லலாம் என்ற ஒரு பழமொழி உண்டு. அதன்படி தெய்வத்தை முழுமையாக நம்பிக்கையோடு வணங்கி , விதிப்பயனை மதியின் வசம் கொண்டு மாற்றி வாழ்க்கையை வசப்படுத்துங்கள்.

வெற்றி காணுங்கள்.