• நவ.18 - 4 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு\
  • இன்று 10 மாவட்டங்களில் கனமழை தொடரும்
  • நவ.17 - 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
  • நவ. 18 - சென்னையில் அதிகனமழைக்கு வாய்ப்பு
வரும் 18ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு திசையில் நகர்ந்து வரும் 18ஆம் தேதி தெற்கு ஆந்திரா - வட தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும்

இன்று கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர் கன மழைக்கு வாய்ப்பு

இன்று கடலூர், தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு

இன்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் ஏனைய மாவட்டங்களில் இன்று அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு

நாளை ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சேலம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

  • நவ.18 - திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு
  • நவ.18 - திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கன மழை பெய்யக்கூடும்
  • நவ.18 - செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன கன மழைக்கு வாய்ப்பு
  • நவ.18 - சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு