Holidays for school and colleges in vellore ranipet and tirupattur district due to heavy rains

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வேலூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, வேலூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூ, ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் வியாழக்கிழமை காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை வழங்கப்பட்டதோடு நாளை நவம்பர் 19 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான ஏரிகளில் நீர் நிரம்பியுள்ளது. கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.