Husband killed, wife injured in car crash on bike near Arcot


வாலாஜா அடுத்த மணியம்பட்டு பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (49), பால் வியாபாரி. இவரது மனைவி லட்சுமி (39), இவர்களுக்கு சினேகா (20). பூஜா(18) என்ற 2 மகள்கள் உள்ளனர்.

நேற்றுமுன்தினம் மாலை விநாயகமூர்த்தி தனது மனைவி மற்றும் மகள்களுடன் ரத்தினகிரி முருகன் கோயிலில் நடை பெற்று வரும் கந்தசஷ்டி விழாவை காண குடும்பத் துடன் வந்தார். விநாயக மூர்த்தி, லட்சுமி ஒரு பைக் கிலும், மகள்கள் சினேகா. பூஜா மற்றொரு பைக்கிலும் வந்தனர். தரிசனம் முடித்துவிட்டு ஊருக்கு புறப்பட்டனர். ரத்தின கிரி அடுத்த தென்நந்தியாலத்தில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு பின்னர் அங்குள்ள சாலையை பைக்கில் கடக்க முயன்றனர்.

அப்போது சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கிச்சென்ற கார் விநாயகமூர்த்தி-லட்சுமி சென்ற பைக் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த இருவரையும் பொதுமக்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், விநாயகமூர்த்தி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். லட்சுமி வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து ரத்தினகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தங்கள் கண்ணெதிரே நடந்த விபத்தில் தந்தை இறந்ததை பார்த்த மகள்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.