நெமிலி அருகே 4 ஆயிரம் மணல் மூட்டைகள் அடுக்கி ஏரிக்கு நீர் கொண்டு செல்லும் பணியை உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் இணைந்து அதிகாரிகள் செய்தனர்.
நெமிலி கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் வருகிறது. இந்த வெள்ள நீர் ஏரிகளுக்கு முறையாக செல்லாமல் தண்ணீர் வீணாகி வருகிறது. மேலும் கீழ்வெங்கடாபுரம் அருகில் கொசஸ்தலை ஆற்றங்கரை ஓரம் உள்ள சுற்றுச்சுவர் 20 அடி அகலத்துக்கு மழைக்கு இடிந்து விழுந்ததால் தண்ணீர் அரு கிலுள்ள இடங்களில் பாய்ந்து வீணாகிறது. இதனால் பரமேஸ்வரமங்கலம், ஆட்டுப்பாக்கத்தில் உள்ள பெரிய ஏரி, சித்தேரி ஏரி ஆகிய ஏரிகளுக்கு தண்ணீர் வரவில்லை.

இதனால் நேற்று முன் தினம் பரமேஸ்வரமங்கலம் பஞ்.தலைவர் கவிதா, ஒன்றிய ஜெ.பேரவை செயலாளர் சங்கர் ஆகியோர் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் மணல் மூட்டைகளை போட்டு அடுக்கினர். ஆனாலும் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் மணல் மூட்டைகளுக்கு மேல் தண்ணீர் வழிந்தோடியது.

இதுகுறித்து நெமிலி பஞ். யூனியன் சேர்மன் வடிவேலு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் செயற்பொறியாளர் ரமேஷ், உதவி செயற்பொறியாளர் பிரபா கரன், உதவி பொறியாளர் கண்ணன், பணி ஆய்வர் கோபி மற்றும் சிலர் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் 4 ஆயிரம் மணல் மூட்டைகளை நேற்று அடுக்கினர். 

இதனால் தண்ணீர் வீணாக செல்லாமல் ஏரிகளுக்கு செல்ல வழி வகை செய்யப்பட்டது. கொசஸ்தலை ஆற்றில் செல்லும் வெள்ளநீர் ஆட்டுப்பாக்கம், பின்னாவரம் ஏரிகள் நிரம்பி பரமேஸ் வரமங்கலம் ஏரிக்கு 40 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.

நெமிலி சேர்மன் வடிவேலு, பரமேஸ்வரமங்கலம் பஞ். தலைவர் கவிதா ஆகியோர் கூறுகையில் எங்களின் கோரிக்கையை ஏற்று பொதுப்பணித்துறயினர் உடனடி நடவடிக்கை எடுத்து தண்ணீரை வீணாக்காமல் ஏரிக்கு கொண்டு வரச்செய்துள்ளனர். இதற்காக பொதுமக்கள் சார்பில் அதிகாரிகளுக்கு மன மார்ந்த நன்றியை தெரி வித்துக்கொள்கிறோம் என்றனர்.

Intensity of work to stack 4 thousand sandbags and carry water to the lake