நெமிலி அடுத்த புன்னை கிராமம் காந்தி சாலை தெருவை சேர்ந்தவர் மாதவன் (50). அசநெல்லிக்குப்பதை சேர்ந்தவர் ஆறுமுகம்.

2019ம் ஆண்டு வியாபாரம் மற்றும் வீடு கட்டு வதற்காக பணம் வேண்டும் என்று ஆறுமுகம், மாதவனிடம் கேட்டுள்ளார். இதனால் பாண்டு எழுதி வாங்கிக்கொண்டு 4 லட்சத்து 49 ஆயிரம் ரூபாயை மாதவன், ஆறுமுகத்திடம் கொடுத்துள்ளார்.

கடன் கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு மாதவன் பல முறை ஆறு முகத்திடம் கேட்டுள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் 24ம் தேதி மாதவன், அவரது மனைவி ஆகியோர் ஆறுமுகத்தின் வீட்டுக்கும் சென்று கடன் கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு கேட்டதற்கு, ஆறுமுகம் அவரது மனைவி மலர் விழி, மகன் மோகன்பிரபு, மருமகள் பிரியா, மாமியார் சுலக்ஷனா ஆகியோர் அசிங்கமாக பேசி கத்தியைக்காட்டி மிரட்டி பணத்தை கேட்டால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து வடக்கு மண்டல ஐஜி அலுவலகத் தில் மாதவன் புகார் கொடுத்தார். அதன்பேரில் நெமிலி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து மோகன்பிரபுவை (38) மட்டும் கைது செய்தனர். 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.