காவேரிப்பாக்கம் ஒன்றியம், ஆயர்பாடி ஊராட்சிக்குட்பட்ட அமராபுரம் பகுதியில் சுமார் 32 இருளர் இன குடும்பத்தினர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு போதுமான இடவசதி, மற்றும் வீட்டுமனை பட்டா. ஆதார் கார்டு, ஓட்டுரிமை, உள்ளிட்ட எந்த ஒரு வசதியும் இன்றி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் சோளிங்கர் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம், நேற்று ஆய்வு செய்தார். அப்போது, இருளர் இன மக்களிடம் அவர்களின் கோரிக்கையை கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
ஆய்வின்போது நெமிலி தாசில்தார் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜோசப் கென்னடி,தனசேகர், ஒன்றிய குழு தலைவர் அனிதா குப்புசாமி, மாவட்ட கவுன்சிலர் சக்தி, ஊராட்சி தலைவர் ஆனந்தி கோவிந்தன், முன்னாள் ஊராட்சி தலைவர் ஓச்சேரி எம். பாலாஜி, ஒன்றிய கவுன்சிலர் தீபாகார்த்திகேயன், ஊராட்சி செயலாளர் மோகன், கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி உட்பட பலர் உடன் இருந்தனர்.