திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்தும் குடிநீர் உட்பட அனைத்து அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்தும் கெலெக்டர் ஆய்வு செய்தார்.

மேலும், தற்காலிக பஸ் ஸ்டாண்டு 10ம் தேதி முதல் 23ம் தேதி தீபம் முடியும் வரை ஈசான்யம், செங்கம் ரோடு, காஞ்சி ரோடு, திருக்கோவிலுார் ரோடு ஆகிய 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கலெக்டர் முருகேஷ் நேற்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறி யதாவது:
திருவண்ணாமலை அருணாச லேசுவரர் கோயில் தீபத்திருவிழா நாளை (இன்று) 7ம் தேதி தொடங்கி வரும் 23ம் தேதி வரை நடக்கிறது. கரோனா தொற்று கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே இணைய வழி மூலம் டிக்கெட் பதிவு செய்து சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். இந்த ஆண்டு 10 ஆயிரம் பேர் (வெளி மாவட்டம், மாநிலம்) தரி வெளியூர் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்திட இணையதளம் http://www. arunachaleswarartemple.tnhrce.in இணையவழி மூலம் வாக்காளர் எண், ஆதார் எண்ணை, வாகன ஓட்டுநர் உரிமம் பயன்படுத்தி டிக்கெட் பதிவு செய்து தரிசனத்துக்கு வரும் போது அனுமதி சீட்டு எடுத்து வரவேண்டும்.
உள்ளூர் பக்தர்களுக்கு சிறப்பு சலுகை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 3 ஆயிரம் பக்தர்கள் நேரடியாக அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ளலாம். இந்த அனுமதி சீட்டை கட்டுப்பாடுகள் விதித்த நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

10ம் தேதி விடியற்காலை 6 மணி முதல் 9 மணி வரை கொடியேற்றம் நடக்கிறது. இதற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

16ம் தேதி பஞ்ச மூர்த்திகள் உற்சவம், தேரோட்டம் இந்த ஆண்டு கோயில் பிரகாரத்தில் உள்ளே நடக்கிறது. அண்ணாமலை மீது ஏறுவதற்கு அனுமதி கிடையாது.
தீபவிழா அன்று லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். அனை வருக்கும் அனுமதி அளித்தால் தொற்று பரவ வாய்ப்பு ஏற்படும். எனவே, கோவிட் தொற்று பரவல் தடுக்கவும், பக்தர்களின் நன்மைக் காகவும் 17ம் தேதி பகல் 1 மணி முதல் 20ம் தேதி வரை 3 நாட்களுக்கு பக்தர்கள் கிரிவலம் செல்லவும் மற்றும் கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்யவும் அனுமதியில்லை.

கோயில் வளாகம் மற்றும் கிரி வலப்பாதையில் அன்னதானம் செய்ய அனுமதி கிடையாது. சிறப்பு பஸ்கள், ரயில்கள் அனுமதி கிடையாது. திருவண்ணாமலையில் சுற்றியுள்ள தங்கும் லாட்ஜ்கள், ஓட்டல்கள், ஆசிரமங்கள், மண்டபங்களில் 38 நாட்கள் மொத்தமாக முன்பதிவு செய்வதற்கு அனுமதி கிடையாது.

பக்தர்கள் அனைவரும் கரோனா முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், அல்லது 24 மணி நேரத்துக்கு முன்னதாக கரோனா பரிசோதனை செய்து, அதற்கான சான்று கொண்டு வரும் பக்தர்களுக்கு மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக் கப்படுவார்கள். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.