ராணிப்பேட்டை சிப்காட் நாசிங்கபுரம் பஞ்.எல்லையில் மேட்டுத்தெங்கால் சாலையில் பனை மரங்களை மர்மநபர்கள் வெட்டி சாய்த்துள்ளனர்




ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் நரசிங்கபுரம் பஞ்., எல்லையில் எம்பிடி பிரதான சாலையிலிருந்து பிரிந்து மேட்டுத் தெங்கால், மணியம்பட்டு, அவரைக்கரைக்கு செல்லும் சாலை ஒன்று உள்ளது.

பனைமரங்களை வெட்டி சாய்த்துள்ளனர்


இந்த சாலை சிப்காட் பெல் நிறுவனத்துக்கு சொந்தமான நிலப்பரப்பின் ஊடே செல்கிறது. இந்நிலையில் இந்த பகுதியில் இருந்த 15க்கும் மேற்பட்ட பனைமரங்களை யாரோ மர்ம நபர்கள் வெட்டி சாய்த்துள்ளனர்.

தாசில்தார் விசாரணை

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் உடனடியாக ராணிப்பேட்டை சிப்காட் போலீசுக்கும், வருவாய்த்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வாலாஜா தாசில்தார் ஆனந்தன்வந்து வெட்டப்பட்ட மரங்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

பனை விதைகள்

பனைமரங்களின் பயன்பாடு, முக்கியத்துவத்தை உணர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல இடங்களில் தொண்டு நிறுவனத்தினர் கடந்த இரண்டு ஆண்டுகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பனை விதைகளை நட்டுள்ளனர்.

சமூக அக்கரை

இப்படி ஒரு பக்கம் சுற்றுச்சூழல், சமூக அக்கரையுடன் செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது. மேலும் முன் அனுமதி இல்லாமல் பனை மரங்களை வெட்டக்கூடாது என்று அரசும் அறிவித்துள்ளது. அதை எல்லாம் மதிக்காமல் சட்டத்தை மீறி கொஞ்சமும் சமூக அக்கரை இல்லாமல் பனை மரங்களை சில நபர்கள் வெட்டியுள்ளனர்.

உரிய நடவடிக்கை

இவர்கள் மீது வரு வாய்த்துறையும், போலீசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் எந்த விதமான அரசியல், மேலிட சமரசங்கள் இருக்கக்கூடாது என்பது இந்த பகுதி மக்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.