ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் ஸ்மார்ட்போன், பெட்ரோல் ஸ்கூட்டர் பெறவிண்ணப்பிக்கலாம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 
தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை ஸ்மார்ட் போன். இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் பெறாத ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பெற விண்ணப்பிக்கலாம்.

பட்டப்படிப்பு படிப்பவர்கள். தனியார் துறையில் பணிபுரிவோர் மற்றும் சுயதொழில் செய்யும் 18 வயது முதல் 45 வயதிக்கு உட்பட்ட பார்வையற்றவர்கள் மற்றும் செவித்திறனற்றவர்கள், 75 சதவீதத்திற்கு மேல் மனவளர்ச்சி குன்றியவர்களின் பெற்றோர் ஆகியோருக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களும், 18 வயதுக்கு மேற்பட்டகைகள் நன்றாக இயங்கக்கூடிய, இருகால்கள்பாதிக் கப்பட்ட மாணவர்கள். தனியார் துறையில் பணி செய்வோர், சுயதொழில் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்களும் தசைச்சிதைவு நோய் மற்றும் விபத்து உள்ளிட்ட காரணங்களால் 2 கைகள், கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் நவீன சக்கர நாற்காலிகள் வழங்கப்படும்.

இந்த உதவி உபகரணங்கள் பெறுவதற்கு வருமான வரம்பு ஏதும் இல்லை. ஆதார் அட்டை, மாற்றுத்திறனாளிகளுக் கான அடையாள அட்டை, கல்வி பயில்வ தற்கான சான்று ஆகிய வற்றின் நகல்கள் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகிய வற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், - ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகவளாகம், ராணிப்பேட்டை என்ற முகவரிக்கு இம்மாதம் 12ம் தேதிக்குள் அனுப்பி - வைக்க வேண்டும்.

இது தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.