வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை உயர்நீதி மன்றம் ரத்து செய்ததால் ஆற்காடு பஸ் ஸ்டாண்டில் நேற்று (02.11.2021) பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வன்னியர் சங்க மாவட்டத்தலைவர் பழனி தலைமை வகித்தார். ஆற்காடு நகர பாமக செயலாளர் அறிவுச்சுடர் வரவேற்றார். பாமக மாவட்ட செயலாளர் நல்லுார் சண்முகம், மாவட்ட அமைப்பு செயலாளர் திருமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாநில வன்னியர் சங்க செயலாளர் முரளி, பாமக மாநில துணைப்பொதுச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான இளவழகன் ஆகியோர் கலந்து கொண்டுபேசினர். இதில் ஆற்காடு நகர வன்னியர் சங்கத்தலைவர் லட்சுமணன், செயலாளர் பிரபா, முன்னாள் ஆற்காடு நகர செயலாளர் பாலா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.