Police warn of floodwaters in Arcot pallar river


ஆற்காடு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள் ளதை தொடர்ந்து, டவுன் இன்ஸ்பெக்டர் விநாயக மூர்த்தி தலைமையிலான போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை செய்தனர்.


ஆற்காடு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை செய்தனர்.

ஆந்திர மாநிலம் கவல குண்டா அணையில் இருந்து, பொன்னை ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், ராணிப்பேட்டை மாவட்டம், பொன்னை அணைக்கட்டில் இருந்து தற்போது உபரிநீர் வெளியேற்றப்பட்டு உள்ளது. மேலும், வடகிழக்கு பருவமழை காரணமாக அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, ராணிப்பேட்டை எஸ்பி தீபா சத்யன் அறிவுறுத்தலின் பேரில், ஆற்காடு டவுன் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலை மையில் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் மற்றும் போலீசார் நேற்று ஆட்டோவில் ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்தனர். 

பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் யாரும் ஆற்றை கடந்து செல்ல வேண்டாம். குளிக்கவோ, துணி துவைக்கவோ ஆற்றில் இறங்கக்கூடாது. சிறுவர்கள் மற்றும் கால் நடைகளை ஆற்றங்கரை அருகில் அழைத்து செல்லக்கூடாது. தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கியபேனர்கள் ஆற்றங்கரை ஓரம் வைக்கப்பட்டு உள்ளது.

ராணிப்பேட்டை : பாலாறு மற்றும் பொன்னை ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை தொடர்ந்து. ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் ஆற்றின் கரையோரங்களில் பேரி கார்டுகள் அமைத்து தடுத் துள்ளதுடன், ஆபத்தான முறையில் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்லக் கூடாது என எச்சரிக்கை பேனர்களை வைத்துள்ளனர்.