ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (45). பாணாவரம் டாஸ்மாக் கடை விற்பனையாளர்.
இவர் கடந்த 25ம் தேதி இரவு கடையை பூட்டி விட்டு விற்பனையான பணம் ரூ.2.30 லட்சம் ரொக்கத்தை பைக் பெட்டியில் வைத்து கொண்டு வீட்டின் அருகே சென்ற போது எதிரே பைக்கில் வந்த இருவர் பழனி ஒட்டி வந்த பைக்கை நிறுத்தினர்.
அதை தொடர்ந்து எதிரே வந்த பைக்கில் போலீஸ் உடையில் இருந்த ஒருவர் லைசன்ஸ் உள்ளதா என்று மிரட்டலாக கேட்டாராம். அதற்கு பழனி வீட்டில் லைசன்ஸ் உள்ளது என்றார். இதையடுத்து பைக்கில் வந்த நபர் பழனியிடம் பைக்கை நிறுத்தி அடுத்த ஏரிமின்னூர் விட்டு லைசன்சை எடுத்து வந்து காட்டி விட்டு பைக்கை எடுத்து செல் என்றாராம்.
இதனால் பழனி பைக்கை அங்கேயே நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்று லைசன்சை எடுத்து வந்து பார்த்த போது பைக்கில் போலீஸ் உடையில் வந்தவரும், அவருடன் வந்தவரும் மாயமாகி இருந்தனர். இதனால் சந்தேகம டைந்த பழனி பைக்கை பார்த்தபோது பைக் பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த பணமும் மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து பழனி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.