ஆற்காட்டில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சோளிங்கர் நோக்கி தடம் எண்.3 அரசு டவுன் பஸ் நேற்று முன்தினம் இரவு வந்துக்கொண்டிருந்தது.
ஜம் புகுளம் கூட்ரோடு அருகே வந்த போது ரோட்டோரம் இருந்த மர்ம நபர்கள் டவுன் பஸ் மீது சரமாரியாக கற்களை வீசினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.
இதுகுறித்து பஸ் டிரைவர் சுந்தரவேல் கொடுத்த புகாரின் பேரில் சோளிங்கர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.