உள் ஒதுக்கீட்டை ரத்து செய்து தீர்ப்பு


தமிழத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள வன்னியர்களுக்கு 10.5%உள் ஒதுக்கீடு வழங்கி கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் நிறை வேற்றப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை உயர்நீதி நீதிமன்ற கிளையில் வழக்குத்தொடரப்பட்டு விசாரணை நடந்தது. விசாரணைக்கு பின்னர் , நீதிபதிகள், உள் ஒதுக்கீட்டை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.

சாலை மறியல் 


இதனால் அதிர்ச்சியடைந்த பாமகவினர் தீர்ப்பை ஏற்க மறுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டுமென தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சாலை மறியல் போன்ற போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்

கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம்


வாலாஜா பேருந்து நிலையம் காந்தி சிலையருகே பாமக நகர செயலாளர் ஞானசேகரன் தலைமையில், பாமகவினர் சுமார் 200க்கும் மேற்பட்டோர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதத்தை ரத்து செய்த மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டுமென கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர் .

போக்குவரத்து ஸ்தம்பித்து


அப்போது திடீரென பேருந்து நிலையம் அருகே சென்னை-பெங்களூரு தேசியநெடுஞ் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்து பரபரப்பு ஏற்பட்டு மிகுந்த நெரிசல் ஏற்பட்டது. உடனே, போலீஸார் சாலையில் அமர்ந்தவர்களை எழுப்பி போராட்டத்தை கலைத்து போக்குவரத்தை சரிசெய்தனர்.