குறள் : 563
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
மு.வ உரை :
குடிகள் அஞ்சும் படியான கொடுமைகளைச் செய்து ஆளும் கொடுங்கோல் அரசனானால் அவன் திண்ணமாக விரைவில் கெடுவான்.
கலைஞர் உரை :
குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு நிச்சயமாக விரைவில் அழியும்.
சாலமன் பாப்பையா உரை :
குடிமக்கள் அஞ்சும்படியாகச் செயல் செய்யும் கொடிய ஆட்சி விரைந்து அழிவது உறுதி.
Kural 563
Veruvandha Seydhozhukum Vengola Naayin
Oruvandham Ollaik Ketum
Explanation :
The cruel-sceptered king who acts so as to put his subjects in fear will certainly and quickly come to ruin.
இன்றைய பஞ்சாங்கம்
07-11-2021, ஐப்பசி 21, ஞாயிற்றுக்கிழமை, திரிதியை திதி மாலை 04.22 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. கேட்டை நட்சத்திரம் இரவு 09.04 வரை பின்பு மூலம். மரணயோகம் இரவு 09.04 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்
மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.
இன்றைய ராசிப்பலன் - 07.11.2021
மேஷம்
இன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிறரை நம்பி எந்த ஒரு பொறுப்புகளையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வெளிப் பயணங்களையும் சுப முயற்சிகளையும் தவிர்ப்பது உத்தமம்.
ரிஷபம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பயணங்களில் புதிய நபர் அறிமுகம் உண்டாகும். உறவினர்களுடன் இருந்த பகை விலகி ஒற்றுமை கூடும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சாதகப்பலன் கிட்டும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தரும காரியங்கள் செய்து மனம் மகிழ்வீர்கள். சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் பெண்கள் ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.
கடகம்
இன்று உங்களுக்கு உடல்நிலை சற்ற மந்தமாகவே இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகத்தால் லாபம் பெருகும். வேலையாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள்.
சிம்மம்
இன்று வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சற்று கவனமாக செயல்படுவது நல்லது. பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் நெருக்கடிகளை சமாளிக்கலாம். திருமண பேச்சுவார்த்தைகளில் நற்பலன் கிட்டும்.
கன்னி
இன்று குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும்.
துலாம்
இன்று நீங்கள் சுறுசுறுப்பின்றி காணப்படுவீர்கள். உடன்பிறந்தவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும் என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பெரிய மனிதர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். தொழிலில் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.
தனுசு
இன்று குடும்பத்தினருடன் ஏற்படும் கருத்து வேறுபாட்டால் மனசங்கடங்கள் ஏற்படலாம். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும். உற்றார் உறவினர்கள் வழியாக ஒரு சில உதவிகள் கிட்டும்.
மகரம்
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடை ஆபரணம் சேர்க்கை ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.
கும்பம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும்.
மீனம்
இன்று உங்களுக்கு பயணங்களால் அதிக அலைச்சல் உண்டாகலாம். வாகனங்கள் மூலம் வீண் விரயங்கள் ஏற்படக்கூடும். கூட்டாளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். உறவினர்களின் உதவியால் பிரச்சினைகள் குறையும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,