குறள் : 570

கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோல் அதுவல்ல
தில்லை நிலக்குப் பொறை.

மு.வ உரை :

கடுங்கோலாகிய ஆட்சிமுறை கல்லாதவரைத் தனக்கு அரணாகச் சேர்த்துக் கொள்ளும் அது தவிர நிலத்திற்கு சுமை வேறு இல்லை.

கலைஞர் உரை :

கொடுங்கோல் அரசு படிக்காதவர்களைத் தனக்கு பக்கபலமாக்கிக் கொள்ளும். அதைப்போல பூமிக்குப் பாரம் வேறு எதுவுமில்லை.

சாலமன் பாப்பையா உரை :

மக்கள் அஞ்சும்படி தண்டனை தரும் ஆட்சி, நீதி நூல்களைக் கல்லாதவரின் துணையுடன் நிற்கும் நாட்டிற்கு அக்கூட்டத்தாரைவிடப் பெரிய சுமை வேறு இல்லை.

Kural 570

Kallaarp Pinikkum Katungol Adhuvalladhu
Illai Nilakkup Porai

Explanation :

The earth bears up no greater burden than ignorant men whom a cruel sceptre attaches to itself (as the ministers of its evil deeds).


இன்றைய பஞ்சாங்கம்

14-11-2021, ஐப்பசி 28, ஞாயிற்றுக்கிழமை, நாள் முழுவதும் வளர்பிறை ஏகாதசி திதி. பூரட்டாதி நட்சத்திரம் மாலை 04.31 வரை பின்பு உத்திரட்டாதி. சித்தயோகம் மாலை 04.31 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 0. 

இராகு காலம்

மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00. 


இன்றைய ராசிப்பலன் - 14.11.2021

மேஷம்

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகலாம். பிள்ளைகளால் மனநிம்மதி குறையும். மற்றவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் உதவியால் பணப்பற்றாக்குறை நீங்கும். வீட்டுத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மிதுனம்

இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் லாபகரமான பலன்கள் உண்டாகும்.

கடகம்

இன்று உங்கள் ராசிக்கு பகல் 10.11 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உறவினர்களுடன் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பொருளாதார பிரச்சினையால் மன உளைச்சல் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் மதியத்திற்கு பிறகு குறைந்து நிம்மதி ஏற்படும்.

சிம்மம்

இன்று எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திடீர் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு பகல் 10.11 முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். வெளி இடங்களில் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. எதிலும் கவனம் தேவை.

கன்னி

இன்று நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். உறவினர்கள் வழியில் சுப செய்தி வரும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். தொழில் விஷயமாக வெளி மாநிலத்தவர் நட்பு ஏற்படும். கொடுத்த கடன் கைக்கு வந்து சேரும்.


துலாம்

இன்று பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கி சாதகமான பலன் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். சேமிப்பு உயரும்.

விருச்சிகம்

இன்று தேவையற்ற பிரச்சினைகளால் குடும்பத்தில் நிம்மதி குறையும். வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பால் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.

தனுசு

இன்று குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் இடையூறுகள் ஏற்படும். செய்யும் செயல்களில் கவனம் தேவை. கடின உழைப்பால் மட்டுமே எதிலும் வெற்றி காண முடியும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

மகரம்

இன்று எந்த செயலையும் மன துணிவோடு செய்து முடிப்பீர்கள். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். பெரிய மனிதர்களின் ஆதரவால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். சுபகாரியங்கள் கைக்கூடும்.

கும்பம்

இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களை முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகள் உண்டாகும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் ஒற்றுமை நிலவும். கூட்டாளிகளின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். எதிலும் நிதானம் தேவை.

மீனம்

இன்று குடும்பத்தில் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளால் நல்ல செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,