குறள் : 584
வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங்
கனைவரையும் ஆராய்வ தொற்று.
மு.வ உரை :
தம்முடைய தொழிலைச் செய்கின்றவர் தம் சுற்றத்தார் தம் பகைவர் என்றுக்கூறப்படும் எல்லாரையும் ஆராய்வதே ஒற்றரின் தொழிலாகும்.
கலைஞர் உரை :
ஓர் அரசில் உளவறியும் ஒற்றர் வேலை பார்ப்பவர்கள், வேண்டியவர், வேண்டாதவர், சுற்றத்தார் என்றெல்லாம் பாகுபாடு கருதாமல் பணிபுரிந்தால்தான் அவர்களை நேர்மையான ஒற்றர்கள் எனக் கூற முடியும்.
சாலமன் பாப்பையா உரை :
அரசுப் பணியாளர், ஆளும் கட்சி, அதன் எதிர்கட்சியினர், அயலவர் என்று அனைவரின் சொல், செயல் கொண்டு அவர்தம் மனக்கருத்தை அறிபவரே ஒற்றர்.
Kural 584
Vinaiseyvaar Thamsutram Ventaadhaar Endraangu
Anaivaraiyum Aaraaivadhu Otru
Explanation :
He is a spy who watches all men to wit those who are in the king�s employment his relatives and his enemies.
இன்றைய பஞ்சாங்கம்
28-11-2021, கார்த்திகை 12, ஞாயிற்றுக்கிழமை, நவமி திதி பின்இரவு 05.30 வரை பின்பு தேய்பிறை தசமி. பூரம் நட்சத்திரம் இரவு 10.05 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் இரவு 10.05 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம்
மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.
இன்றைய ராசிப்பலன் - 28.11.2021
மேஷம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
ரிஷபம்
இன்று வீட்டில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். வராத கடன்கள் வசூலாகும்.
கடகம்
இன்று நீங்கள் வீண் பேச்சை குறைத்துக் கொண்டால் குடும்பத்தில் அமைதி நிலவும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.
சிம்மம்
இன்று உங்களுக்கு இருந்த பொருளாதார நெருக்கடிகள் குறைந்து மனநிம்மதி உண்டாகும். பெரியோர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.
கன்னி
இன்று உங்களுக்கு பணவரவு ஏற்ற இறக்கமாக இருக்கும். உடல் ஆரோக்கிய பாதிப்புகளால் எதிலும் ஈடுபாடின்றி செயல்படுவீர்கள். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். பணம் கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம்.
துலாம்
இன்று குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். உற்றார் உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். தொழிலில் அதிக லாபம் கிட்டும். புதிய பொருள் வீடு வந்து சேரும்.
விருச்சிகம்
இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும்.
தனுசு
இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் காலதாமதமாகும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். வீட்டில் பெண்களுக்கு வேலைபளு கூடும்.
மகரம்
இன்று உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுபகாரிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்த்தால் பிரச்சினைகள் குறையும். பயணங்களில் கவனம் தேவை.
கும்பம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணம் சம்பந்தமான சுபகாரியங்களில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பொன் பொருள் சேரும்.
மீனம்
இன்று பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,